டோக்கியோ: ஜப்பானில் ராணுவ பயிற்சியின் போது பீரங்கியில் குண்டு வெடித்து 3 வீரர்கள் பலியாகினர்.ஒருவர் படுகாயமடைந்தார். ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஹிஜுடாய் பயிற்சிப் பகுதியில், ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நேற்று நடந்தது. பீரங்கி வாகனத்தில் இருந்த வீரர்கள் துப்பாக்கிசூடு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பீரங்கிக்குள் குண்டுவெடித்தது. இதில் பீரங்கி வாகனத்தில் இருந்த ஒரு கமாண்டர், இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். பீரங்கி வாகனத்தின் டிரைவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
