பிரிட்டனில் ஜனவரி 1, 2009-க்குப் பிறகு பிறந்த யாரும் புகையிலைப் பொருட்களை வாங்க முடியாது என வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியுள்ளது. வருங்கால தலைமுறையினருக்கு முழுமையான தடை விதித்து, புகை பழக்கம் இல்லாத நாடாக உருவாக பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.
