8 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஈரான் : விடுவிக்க ஈரானுக்கு டிரம்ப் திடீர் கோரிக்கை

வாஷிங்டன் : ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதலை துவக்கி நடத்தின. இதில் 2000-திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள் இந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது இதனால் பதற்றம் சற்று தணிந்தது.

ஆனால் ஈரான், அமெரிக்க இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேர தொடக்கக்கட்ட அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் இந்த அமைதி பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சூழலில் ஈரானில் தூக்கு தண்டனையை எதிர்கொள்ளும் பெண்களை விடுவிக்குமாறு டிரம்ப் கூறியுள்ளார்.சமூக ஊடக ஆர்வலரான இயால் யாகோபி வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் ஈரானில் உள்ள 8 பெண்கள் தூக்குத்தண்டனை எதிகொள்ள கூடிய சூழலில் உள்ளனர் என தெரிவித்திருந்தார். அவர்களுடைய புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இயால் யாகோபி வெளியிட்ட பதிவு டிரம்ப்பின் கவனத்தை ஈர்த்ததுள்ளது, அதனை தன்னுடைய எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டிரம்ப் என்னுடைய பிரதிநிதிகளுடன் விரைவில் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ள ஈரான் தலைவர்களே இந்த பெண்களை விடுதலை செய்யுங்கள், நான் உங்களை பெரிது பாராட்டுவேன். நீங்கள் விடுவித்த பின்னர் உண்மையை அவர்கள் மதிப்பார்கள் என நான் உறுதியாக கூறுகிறேன் தயவு செய்து அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்த வேண்டாம் அது நமது பேச்சு வார்த்தைக்கு மிக பெரிய தொடக்கமாக அமையும்.

இந்த 8 பெண்களில் பெரும்பாலோர் இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வெடி குண்டுகளை பயன்படுத்துதல், கான்கிரீட் கற்கள் போன்ற பொருட்களை எறிதல், போராட்டத்தில் பங்கேற்பது, காயப்பட்ட போராட்டக்காரர்களுக்கு உதவுவது மற்றும் தேசிய பாதுகாப்பை சீர்குலைத்தல் ஆகியவை அடங்கி இருக்கிறது.

இதுவரை இந்த 8 பெண்களின் அடையாளங்கள் அல்லது அவர்கள் மீது உள்ள வழக்குகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதி படுத்துதலும் வெளியாகவில்லை. மேலும் அவர்களை விடுதலை செய்யுமாறு டிரம்ப் வைத்த கோரிக்கைக்கு ஈரான் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரியவருகிறது.

Related Stories: