விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக செவ்வாய் கிரகத்தில் இதுவரை கண்டறியப்படாத பல புதிய கரிம சேர்மங்களை (Organic Compounds) நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் (Curiosity Rover) கண்டறிந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
செவ்வாயில் நிலநடுக்கோட்டின் பகுதியில் உள்ள உலர்ந்த ஏரிபடுகையில் இருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததில் கார்பன் அணுக்களால் (Carbon Atoms) ஆன ஏழுவகை சிக்கலான கரிம சேர்மங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஐந்து மூலக்கூறுகள் செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக போவையில் (Bovine) உயிரனங்கள் மரபணுவான DNA உருவாகுவதற்கு அடிப்படையாக இருக்கும் வேதிப்பொருள்களை போன்ற அமைப்புகள் தென்பட்டுள்ளன. இதனிடையே இவை உயிரியல் ரீதியாக உருவானவையா? அல்லது புவியியல் மாற்றங்களால் உருவானவையா? என்பது குறித்து தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த முக்கிய கண்டுபிடிப்பு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகம் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலில் இருந்திருக்கலாம் என்ற ஆதாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
