துறைமுகம் நாதக வேட்பாளர் காரில் டம்மி துப்பாக்கி

சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சக்திவேல் முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் சோதனை மேற்கொண்டபோது ஏர் பிஸ்டல் எனப்படும் டம்மி துப்பாக்கி இருந்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் டம்மி துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில், துறைமுகம் தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பவுசான் ஷெரீப் (25) என்பவரின் நண்பர் அப்துல் அமீர் (25) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: