சின்னதாராபுரம் அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

க.பரமத்தி, பிப்.23: சின்னதாராபுரம் அருகே நேரு நகர் பகுதியில் மனவேதனையில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரம் ஊராட்சி நேருநகர் பகுதியை சேர் ந்தவர் சென்னியப்பன் மனைவி அருந்ததி (61). விவசாயியான இவர் தனது மகனுக்கு 37வயது கடந்தும் திருமணம் அமை யவில்லை என்ற மனவேதனையில் இருந்தாராம். இதனால் மனமுடைந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்று மயங்கியதாகவும் தகவலறிந்த உறவினர்கள் பாதிக்கப்பட்டவரை கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைகாக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினார் இது குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>