கரூர், ஏப். 17: கடந்த மார்ச் 15ம்தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறி ச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் முறையான ஆவணங்களின்றி பணம் மற்றும் பொருட்கள் எடுத்து செல்வதை காண்காணிக்க 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நான்கு தொகுதிகளிலும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று காலை 6 மணி வரை ரூ. 86லட்சத்து 96 ஆயிரத்து 851 ஐ பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து, முறையான ஆவணங்கள் இருந்த காரணத்தினால் இந்த குழுவினர் ரூ. 82லட்சத்து 50 ஆயிரத்து 801 ஐ திருப்பி செலுத்தினர். தற்போதுவரை ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 50 மட்டும் இருப்பில் உள்ளதாக காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த குழுவினர் 63 வழக்குகளை பதிவு செய்து, 58 வழக்குகளை விடுவித்துள்ளனர். 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
