சித்திரையில் புத்தொளி பிறந்திடுமா?

மாதங்கள் 12…!
இருப்பினும், ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உள்ளதை ஜோதிடக் கலை விவரித்துள்ளது. அதிலும், சித்திரை மாதத்திற்கென்று ஓர் பிரத்யேக பெருமை இருப்பதையும் அதே ஜோதிடக் கலை விவரித்துள்ளது.
நவகிரகங்களுக்கு, நாயகன் சூரியன்!
ஆதித்யன், பகலவன், பாஸ்கரன் என்றெல்லாம் புகழப்படும் சூரிய பகவானின் பெருமைகளை யஜுர் வேதமும், சாம வேதமும் விவரிக்கின்றன. உலகில் ஏராளமான உயிரினங்களுக்கும் ஆத்ம சக்தி, ஜீவ சக்தி, பிராண சக்தி ஆகியவற்றை அளித்தருளும் சூரியன்தான், ஆண்டுதோறும் நாம் செய்துவரும் திதி – பூஜைகளின் பலன்களை மறைந்த நம் முன்னோர்களிடம் கொண்டு சேர்ப்பிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆதலால்தான், சூரியனை “பித்ரு காரகர்” எனப் பூஜித்து வருகிறோம்.
பித்ருக்கள், தங்கள் மானிட உடலை நீத்த பிறகு, இறைவனுடன் ஐக்கியமாகியிருந்தாலும், மறுபிறவி எடுத்திருந்தாலும், நாம் செய்யும் தர்ப்பணம், திதி போன்ற பித்ரு பூஜைகளின் பலன்களை, உரியவர்களிடம் ெகாண்டு சேர்க்கும் பணியினை சூரிய பகவான் ஏற்றுள்ளார்.
இதனால், உள்ளம் மகிழ்ந்து, நமது முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிக்கும் பலனை நம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பதும் சூரிய பகவானே ஆவார். இவ்விதம் நமக்கும், மறைந்த நம் முன்னோர்களுக்கும் இடையேயுள்ள உறவினைத் தொடர்ந்து நிலைப்பதற்கு, சூரியனின் தெய்வீக சக்தியே காரணமாகும்.
ஆதலால்தான், இதிகாச புராணங்களும், வேதங்களும் சூரியனை, “பித்ரு காரகர்” -எனப் போற்றிப் புகழ்கின்றன.
நல்ல உடல் ஆரோக்கியம், ஒழுக்கம், பெற்றோர்களிடம் மரியாதையுடன் கூடிய அன்பு, நேர்மை, தெய்வ பக்தி, பித்ரு பக்தி ஆகிய நற்பண்புகள் ஒருவருக்கு ஏற்பட அவரது ஜெனன கால ஜாதகத்தில், சூரியன் சுப பலம் பெற்றிருக்க வேண்டும்.
ஓய்வின்றி, தனது ரதத்தில் சதா வலம் வந்து கொண்டிருக்கும் சூரிய பகவானால்தான் உலகில் இரவும் பகலும் மாறி – மாறி நிகழ்கின்றன.
ஜனன கால ஜாதகத்தில் சூரியனின் சொந்த ராசி சிம்மமாகும். உச்ச ராசி மேஷம், துலாம் ராசி நீச்ச வீடாகும்.
சூரியனுக்கு, குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூவரும் நட்பு கிரகங்களாவர். ஒவ்வொருவரின் ஜனன கால ஜாதகத்தில் சூரியன் சுப பலம் பெற்றிருந்தால், தைரியம், மக்களிடையே செல்வாக்கு, துணிந்து செயலாற்றும் திறன், தந்தையிடம் பக்தி ஆகிய நற்குணங்களுடன் திகழ்வதாக புராதன ஜோதிடக் கிரந்தங்கள் விவரித்துள்ளன.
ஆண்டுதோறும், நாம் செய்யும் திதி – பூஜைகளின் பலாபலன்களை, எங்கோ மறு பிறவி எடுத்துள்ள மறைந்த முன்னோர்களிடம் சேர்ப்பிப்பது சூரிய பகவானேயாவார்.
கிருத்திகை, உத்திராடம், உத்திரம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் சூரியனே நாயகனாவார்!
ஸ்ரீ ராமபிரான், “ஆதித்ய ஹிருதயம்” என்ற சக்திவாய்ந்த மகாமந்திரத்தால் ராமன், ராவணனை வெல்லும் ஆற்றலைப் பெற்றார்!
சூரியனின் இத்தகைய சக்தியையும், பெருமையையும் கொண்டு திகழும் சூரியனின் மகரம், கும்பம், ரிஷபம் ஆகிய மூன்று வீடுகளும் பகை ராசிகளாவர்.
நவகிரங்களில் குரு, சந்திரன் மற்றும் செவ்வாய் மூவரும் நட்புக் கிரகங்களாவர்.
சூரிய பகவானை நாயகனாக வைத்து கொண்டாடிப் புகழ்கின்றன, யஜுர் வேதமும், சாம வேதமும்!
கடலிலுள்ள நீரை கிரகித்து, மேகங்களில் சேகரித்து, மீண்டும் மழையாக உலக மக்களுக்குத் திருப்பியளிக்கும் பெருமை சூரியனையே சேரும் என நவீன விஞ்்ஞானமும் போற்றிப் புகழ்கின்றது.
இனி, இம்மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளைக் காண்போம்!

சித்திரை 1 – (ஏப்ரல் 14) செவ்வாய்க்கிழமை – பராபவ தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு விஷூ புண்ணியகாலம். பித்ருக்களைப் பூஜித்து, அவர்களது ஆசியைப் பெறவேண்டிய புண்ணிய தினம். மேலும், இன்றைய தினத்தில் குல தெய்வ வழிபாடும், சூரியபகவானுக்கு வெற்றிலை பாக்கு – பழம் தாம்பூலத் தட்டுடன் புதுப் பஞ்சாங்கமும் வைத்து வணங்கி வழிபடுதல் வேண்டும். இவ்வண்ணம் செய்வோர்க்கு, இந்தாண்டு முழுவதும் அளவிற்கு அதிகமான நன்மைகளைப் பெற்று, மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் வைய்யத்துள் வாழ்வாங்கு வாழும் வகைகளைத் தந்தருள்வார் பித்ரு காரகரான சூரிய பகவான்!
சித்திரை – 2 (ஏப்ரல் 15) புதன்கிழமை – கிருஷ்ணபட்ச பிரதோஷம். தசாவதாரத்தில் திருமாலின் முதல் அவதாரமாகிய “மத்ஸ்ய அவதார” தினம் – இயன்றவர்கள் இந்நன்னாளில் உபவாசம் இருப்பது புண்ணியத்தைத் தரக்கூடியது. தானமளிப்பதும், ஆலய தடாகங்களிலுள்ள மீன்களுக்கு உணவளிப்பது, வேத பாராயணம் செய்வதும் காதால் கேட்பதும் மகத்தான புண்ணிய பலன்களைப் பெற்றுத்தரவல்லது. இன்று மாத சிவராத்திரி. ஏகாதசியை அடுத்து, பிரதானமான விரதமாகக் கொண்டாடப்படக்கூடியது மாத சிவராத்திரி. இந்நாளில் மாலை நேரத்தில் இரண்டாவது முறையாக ஸ்நானம் செய்துவிட்டு, விபூதி சின்னம் – ருத்ராக்ஷங்கள் தரித்துக் கொண்டு, அனைத்துவகை திரவியங்களினால், (தயிர், பால், தேன்,கரும்புப் பால், நெய், தேங்காய்ப்பூ, மா, வாழை, பலா , பஞ்சாமிருதம்) அபிஷேகம் செய்விக்க வேண்டும். இன்றையதினத்தில் வில்வ தளத்தினால் எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்வித்தல் மகத்தான புண்ணிய பலனைத் தந்தருள்வார் என ஸ்காந்த புராணத்தில் அறுதியிட்டு – உறுதிபடக் கூறியுள்ளது.
சித்திரை – 3 (ஏப்ரல் 16) வியாழக்கிழமை – போதாயன அமாவாசை.
சித்திரை – 4(ஏப்ரல் 17) வெள்ளிக்கிழமை – அமாவாசை. மேலும் இன்று அஷ்டமா சித்துக்களையும் கைவரப் பெற்ற சித்த மகா புருஷர்களான வரருசியார் மற்றும் காலிங்கநாதர் ஆகியோரிகளின் திருநட்சத்திரம்.
சித்திரை – 5(ஏப்ரல் 18) சனிக்்கிழமை – இன்றைய தினத்தில் அனைத்து புண்ணிய நதிகளிலும் கங்கையின் புனிதத்தைப் பெறுவதால், இந்நன்னாளில் நதி தீரங்களில் ஸ்நானம் செய்திட்டு, தான – தர்மங்களை (பரிகாரங்களாக செய்தால் அனைத்துவித நலன்களையும் நீங்கள் பெறப்போவது உறுதி.
சித்திரை – 6 (ஏப்ரல் 19) ஞாயிற்றுக்கிழமை – கிருத்திகை விரதம்.
சித்திரை – 7 (ஏப்ரல் 20) திங்கட்கிழமை – அட்சய திருதியை. மேலும், இன்றைய தினம், தசாவதாரமெடுத்த திருமாலின் நான்காவது அவதாரமாகிய ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் பராக்கிரமித்திற்கு இணையாகப் போற்றி புகழப்படுபவரும், பூமிகாரகராகிய செவ்வாயின் தோஷங்கள் அனைத்தையும் போக்கி இன்னருள் புரியும் பகளாமுகீ ஜெயந்தி! மேலும், இன்றைய தினம் வார்த்தா கௌரி விரதம் – இவ்விரதத்தைக் கைக்கொள்ளும் கன்னியருக்கு, கண் நிறைந்த கணவர் வாய்க்கப் பெறுவர்..
சித்திரை – 8 (ஏப்ரல் 21) செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் ஜெயந்தி. மாக்கோலமிட்டு, ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, நெய் தீபமேற்றி, கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லிப் பூஜிக்க, நம் சந்ததியினர், புத்திகூர்மையுடன், சகல கலைகளையும் கைவரப் பெற்று, அனைத்து ஜீவராசிகளுக்கும் உபதேசம் அளிக்கும் தெய்வீக வல்லமை பெறுவர். மேலும், இன்றைய தினம் லாவண்ய கௌரி விரதம் – இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கும் நங்கையர், காண்போர் வியக்கும் வண்ணம் மேனி தங்கமென பொலிவுறும் ; நித்திய – தீர்க்க சுமங்கலிகளாகப் பரிமளிப்பர்.
சித்திரை – 9 (ஏப்ரல் 22) புதன்கிழமை – ஸ்ரீ மத் ராமானுஜர் ஜெயந்தி, இன்றைய தினத்தில் ஸ்ரீ மத் ராமானுஜர் அருளிய “ஓம் நமோ நாராயணாய” திவ்யாட்சர மந்திரத்தை பதினெட்டு முறை அல்லது முடிந்தால், 108 முறை ஜெபிக்க சகல நலன்களையும் பெற்று, மோட்ச சாம்ராஜ்யத்தை அடையும் தகுதி பெறுவீர்கள். மேலும் இன்று சஷ்டி விரதம்.
சித்திரை – 14 (ஏப்ரல் 27) திங்கட்்கிழமை – சர்வ ஏகாதசி. காசிக்கு நிகரான ே்க்ஷத்திரமில்லை. கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தம் கிடையாது. காயத்ரி மஹா மந்திரத்திற்கிணையான மந்திரமில்லை. தாயிற் சிறந்த கோயிலில்ைல -என்பது ஆன்றோர் வாக்கு. அனைத்து விரதங்களுக்குள் முக்கியமான விரதமாகும், இவ்விரதம்! மேலும், இன்று மல்லிகை, முல்லை மலர்களின் மொட்டுக்களைப் போன்றவரும், வடிவழகில் ஒப்பில்லாதவரும், சந்திர பகவானின் திருக்குமாரரும், ஸௌம்யமானவரும், கல்விக் கேள்விகளுக்கு ஆதிபத்தியம் கொண்டவரும், மாமேதைகளையும், நாவன்மை மிக்கோரை உருவாக்கித் தருபவரும், வைத்திய அறிவு, ஞான – தர்க்க சாஸ்திரம், கணிதம் உள்பட அனைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குபவரும், பஞ்சபூதங்களில்”நில”்த்திற்குச் சொந்தக்காரரும், வடக்கு திசைக்கு அதிபதியும், ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், பாபக் கிரங்களுடன் இணைந்திருக்கும் பட்சத்தில் பாப பலன்களைத் தருவோனும், சுப-கிரகத்துடன் சேர்ந்திருக்கும் பட்சத்தில் சுபத்துவப் பார்வையுடை யோகத்தையும், தனித்திருந்தால், அனைத்து நலன்களையும் அருளக்கூடியவனாகவும், ஆயில்யம், கேட்ைட, ரேவதி நட்சத்திரங்களின் நாயகனும், கன்னி ராசி உச்ச வீடாகவும், மீன ராசி நீச்ச வீடாகவும், மிதுனம், கன்னி ராசிக்கு உரியவரும், நவகிரகங்களில், “கல்விக் கிரகம்”, “வித்யாகாரகர்” எனப் பலவாறாக போற்றிப் புகழப்படும் புதனின் ஜெயந்தி! இன்றைய தினத்தில் நவகிரகங்களின் சந்நிதிக்குச் சென்று, புதன் பகவானுக்கு பச்சை ஆடை உடுத்தி, மூன்று மண் அகல் விளக்குகளில் நெய் தீபமேற்றி, பச்சை நிற மலர்களைக் கொண்டு அர்ச்சிக்க ஜனன ஜாதகத்தில் புதன் தோஷம் விலகிவிடும். மாணாக்கர்கள் கல்வி – கேள்விகளில் சிறந்து விளங்கிடுவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?!
சித்திரை – 16 (ஏப்ரல் 29) புதன்கிழமை – பிரதோஷம். திருப்பாற்கடலைக் கடைந்தபோது முதன் முதலில் தோன்றியது ஆலகால விஷம்! அதைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் அஞ்சி நடுங்கினர். உலகை காக்கும் பொருட்டு அவ்விஷத்தை சிவபெருமான் உண்டு, உலகத்திலுள்ள அத்துனை ஜீவராசிகளையும் காத்தருள் புரிந்தார். தன் நெஞ்சினிலேயே வைத்துக் கொண்டதாலேயே அவ்விடம் . நஞ்சினால் நீல நிறமாயிற்று!அவருக்கு திருநீலகண்டர் என்ற பெயருண்டாயிற்று. இந்த ஆலகால விஷத்தை உண்ட காலத்தையே பிரதோஷக்காலம் என்றழைக்கின்றோம்.
சித்திரை – 17 (ஏப்ரல் 30) வியாழக்கிழமை – ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி. ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் அவதாரத் தினமாகிய இன்றைய தினத்தில் உபவாசமிருந்து, மாலை பிரதோஷக் காலத்தில், மாக் கோலமிட்டு, ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமியின் திருவுருவப் படத்தை எழுந்தருளச் செய்து, துளசி தளத்தினால் அர்ச்சனை செய்வித்துவிட்டு, ஊறவைத்த பாசிப் பருப்பு,தேங்காய்த்துருவல்,உப்பு சேர்த்த (கோசுமல்லி) மற்றும்பானகம், நைவேத்தியம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும். இவ்விரதத்தைக் கைக்கொள்வார்க்கு, பொருளாதாரத்தில் வெற்றி நிலை உயரும், வாழ்க்கையில் வசந்தம் வீசுவதைக் கண்கூடாகக் காண்பீர்கள். சித்திரை – 18 (மே 01) வெள்ளிக்்கிழமை – பெளர்ணமி விரதம் – இவ்விரதத்தை பக்தி – சிரத்தையுடன் கடைப்பிடிப்பார்க்கு, சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வதாக சத்தியப் பிரமாணம் செய்துள்ளதாலேயே இப்பரம்ெபாருளுக்கு “சத்திய நாராயணன்” என்ற காரணப் பெயர் உண்டாயிற்று.
ஒவ்வொரு பௌர்ணமியன்றும், காலை முதல் உபவாசமிருந்து, மாலை வேளையில் சந்திரனின் உதயத்தைத் தரிசித்தபிறகு, இவ்விரதத்தைச் செய்ய வேண்டும். இவ்விரதத்தை இம்மாதம் (சித்திரையில்) தொடங்குவது சாலச் சிறந்தது. இவ்விரதத்தைப் பற்றி ஸ்கந்தபுராணம் சிலாகித்துக் கூறியுள்ளது. மற்றும் சித்திரகுப்த பூஜை இன்றைய தினத்தில் முறத்தில் நவதானியங்களைப் பரப்பி, உங்களால் முடிந்த தட்சிணை வைத்து, வேதம் படித்தவர்களுக்கு தானம் செய்வித்தல் மகத்தான புண்ணிய பலனைப் பெற்றுத் தரும். இதனால் காலஞ்சென்ற – அகால மரணமடைந்த நம் மூதாதையர் சொர்க்கம் செல்வர்.
சித்திரை – 21 (மே 4) திங்கட்கிழமை – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
சித்திரை – 22 (மே 5) செவ்வாய்க்கிழமை – சங்கடஹர சதுர்த்தி
சித்திரை – 26 (மே 9) சனிக்கிழமை – திருவோணவிரதம் – ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். மேலும், இன்றைய தினம் ஸ்ரீ கால பைரவருக்கும், ஸ்ரீ சிவபெருமானுக்கும் உகந்த தேய்பிறை – சதாசிவ அஷ்டமி திருநாள். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போர்க்கு மனக்கிலேசங்கள் நீங்கி புத்தொளி பெறுவர். தம்பதியருக்குள் அந்நியோன்யம் ஓங்கும், ஈருடல் ஓருயுராக, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, இணைபிரியா தம்பதியராக அன்புடனும், ஆதரவுடனும் அவணியில் பரிமளிப்பர். இந்நன்னாளில் காலையில் காலைக் கடன்களை முடித்து நீராடி, சிவபெருமானை தரிசனம் செய்து, மாலை வேளையில் அதாவது சூரிய அஸ்தமத்தின்போது ஸ்ரீ பைரவரையும் தரிசனம் செய்தால் சகல பாபங்களும் விலகிடும், வீட்டில் மகிழ்ச்சியும், மனநிறைவுடன்கூடிய நல்வாழ்வு அமையப்பெறுவீர்கள்.
சித்திரை – 28 (மே 11) திங்கட் கிழமை – ஸ்ரீ அப்பர் பெருமான் குருபூஜை கீழ்க்காணும் தெய்வீக மந்திரச் சொற்களால் அமயைப்பெற்ற தேவாரப் பாடலை மனமுறுகிப் பாடி வந்தோமையானால், தீராத நோய்களையும் தீர்த்து வைப்பார் அந்தப் பரம்பொருள். நமக்குத் தேவை, நம்பிக்கையுடன் கூடிய பக்தி மட்டுமே!
கூற்றாயினவாறு விலக்ககிலீர்!
கொடுமை பல செய்தன நானறியேன்,
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்! அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே!
சித்திரை – 30 (மே 13) புதன் கிழமை – சர்வ ஏகாதசி.
சித்திரை – 31 (மே 14) வியாழக்கிழமை – பிரதோஷம்.
இனி, சித்திரை மாதத்தின் நவகிரகங்களின் சஞ்சார பலன்களைச் சற்று ஆராய்ந்து பார்ப்போம்!

Related Stories: