உலக மக்களைக் கவலையிலாழ்த்திவிட்டு, விலகிச் சென்றுவிட்டது, விசுவாவசு! பிறக்கிறது, பராபவ தமிழ்ப் புத்தாண்டு! புத்தாண்டு பிறக்கிறது என்றாலே, மக்களிடையே ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை! மகிழ்ச்சி மட்டுமா? எத்தனை, எத்தனை எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள்! இப்புத்தாண்டிலாவது, நம் ஆசைகள் நிறைவேறிடுமா? மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, இப்புத்தாண்டிலாவது நல்ல வரன் அமையுமா? -என்ற ஏக்கம். வேலை இல்லாத இளைஞர்களுக்கு இனியாவது நல்ல நிறுவனத்தில் பணி கிடைத்து, குடும்பப் பிரச்னைகள் தீருமா -என்ற எதிர்பார்ப்பு. இப்புத்தாண்டிலாவது, நமக்கு நல்வாழ்வு பிறக்குமா என, ஒவ்வொருவரும் ஆர்வமும் நம்பிக்கையும் மேலிட பராபவப் புத்தாண்டை வரவேற்கின்றனர்! விடைபெறும் விசுவாவசு ஆண்டில்தான், எத்தனை, எத்தனை போர்கள் இரக்கமில்லாத குண்டுவீச்சுகள்! உருக்குலைந்த கட்டடங்களும், சீரழிந்த குடும்பங்களும் எண்ணிலடங்கா! மழலை முகம் மாறாப் பச்சிளங்குழந்தைகள், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளுடன், ஏங்கி நிற்கும் இளைஞர்கள், அடுத்த நிமிடம் என்னவாகுமோ? -என்ற அச்சத்துடன் ‘‘பதுங்கு குழிகளில்” பதுங்கிக் கொண்டிருக்கும் பெண்டிரும் – கைக் குழந்தைகளும்! இப்புத்தாண்டிலாவது, நமக்கு நிம்மதி கிடைக்குமா? – என ஏங்கும் குடும்பங்கள் ஏராளம்!
உலகமே நிம்மதியின்றி, கண்ணீரில் கதிகலங்கி நிற்கும் நிலையில், பராபவ – தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது! நவகிரகங்களின் சஞ்சார ரீதியில், இப்புத்தாண்டில் பாரத மக்களுக்கு நிகழவிருக்கும் நன்மை – தீமைகளை இனி ஆராய்ந்து பார்ப்போம். நவக்கிரங்களின் ஆதிக்கத்தில்! இவ்வருடம் முழுவதும், குரு பகவானின் ஆதிக்கத்தில் வருவதால், இவ்வருடத்தின் ‘‘ராஜா – குரு பகவான்”
– என விவரிக்கிறது, ஜோதிடக் கலை.
அதாவது, அனைத்து கிரகங்களும், குரு பகவானின் ஆதிக்கத்தில்தான் இவ்வருடம் முழுவதும் உள்ளது என்பதே அதன் கருத்து. இதன் பலனாக, பெரும்பான்மையான பலன்கள், குரு பகவானின் சஞ்சார நிலையை ஒட்டியே நிகழும். வைகாசி 12-ம் தேதி (26-05-2026) கடகத்திற்கு மாறும் குரு பகவான், ஐப்பசி 3-ம் தேதி (20-10-2026) சிம்மத்திற்கு மாறுகிறார்!
[பொதுவாக, குரு பகவானின் ராசி மாறுதல் ஆண்டிற்கு ஒருமுறைதான் நிகழும். ஆயினும், பல அரிய தருணங்களில் பிற கிரகங்களின் ஆகர்ஷண சக்தியினால் ஓராண்டிற்கு முன்னதாகவே குரு ராசி மாறுதல் நிகழ்கிறது! இவ்விதம்தான் இப்போதும் ஓராண்டிற்கு முன்னதாகவே குரு பகவானின் ராசி மாறுதல் நிகழ்கிறது. மிக முக்கியமான குரு பகவானின் இந்த ராசி மாறுதலைக் கணக்கில் கொண்டே கீழ்க்கண்ட ராசி பலன்கள் (டிகிரி சுத்தமாக) கணித்துக் கூறப்பட்டுள்ளது. மிகத் துல்லியமான இக்கணித முறையைப் பெரியோர்கள், ‘‘ஷோடஸ ஸதவர்க்கம்” எனக்கூறுவர். ஜோதிடக் கலையின் விலைமதிப்பிட முடியாத கணித முறை இதுவே ஆகும்.]
மக்களிடையே ஒழுக்கமும், தர்ம சிந்தனைகளும் அதிகரிக்கும். குரு பகவானுக்கு அடுத்தபடியாக, செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்திற்குள் வருகிறது, பராபவ – தமிழ்ப் புத்தாண்டு! செவ்வாய் கிரகத்தினை- ‘‘பூமிகாரகர்” என விவரிக்கிறது ஜோதிடக் கலை! ஆதலால், இவ்வாண்டு நல்ல மழைபொழியும். விளைச்சல் அதிகரிக்கும். பயிர்கள் செழித்து வளரும். அர்க்காதிபதியாகவும், ேமகாதிபதியாகவும், சந்திரனாக இருப்பதாலும், தானியாதிபதி புதன் கிரகமாக விளங்குவதாலும் இப்புத்தாண்டு முழுவதும் நெல் மற்றும் இதர தானியங்களின் விளைச்சல்கள் எதிர்பார்ப்பதைவிட, அதிகமாக இருக்கும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகளுக்கு, மிகவும் லாபகரமான புத்தாண்டு இது! கால்நடைகள் அபிவிருத்தியடையும்.
குரு பகவானுக்கு அடுத்தபடியாக, ‘‘பூமி காரகரான” செவ்வாய் சுபபலம் பெற்றுத் திகழ்வதால், நம்நாட்டின் ராணுவ பலம் அதிகரிக்கும். இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி அதிகரிக்கும். பொருளாதார ரீதியில், பாரதம் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடையும். உலக நாடுகளிடையே மதிப்பும், மரியாதையும், செல்வாக்கும் உயரும். மக்களிடையே தேச பக்தி அதிகரிக்கும். ஆயினும், இயற்கையின் சீற்றத்தினால், சில பகுதிகள் சேதமடையக்கூடும்.தேசத் தலைவர் ஒருவரின் உடல் நலன் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதையும், சனி மற்றும் சுக்கிரனின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
சில பகுதிகளில், மதக் கலவரங்்கள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில் பாரதம் உலக மேடையில் தலைநிமிர்ந்து நிற்கும். அண்டை நாடான பாகிஸ்தானுடன் உள்ள அரசியல் உறவு மேலும் பாதிக்கப்படக்கூடும் சிறு சிறு ராணுவ மோதல்கள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. அமெரிக்க நாட்டுடன் நிலவும், நல்ல உறவும், சற்று பாதிக்கப்படும். ராணுவம் மற்றும் பொருளாதார நிலைகளில் உலகம் வியக்கும் வண்ணம் பாரதம் முன்னேற்றமடையும். ரஷ்ய நாட்டுடன் உள்ள அரசியல் மற்றும் ராணுவ உறவு மேம்படும். சீனா மற்றும் பங்களாதேஷுடனான அரசியல் உறவு முன்னேற்றமடையும். இனி, இப்புத்தாண்டில், நமது பாரதப் புண்ணிய பூமியில் நிகழவிருக்கும் முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போமா?
சித்திரை
சித்திரை – 1 (ஏப்ரல் 14) செவ்வாய்க்கிழமை – பராபவ தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு விஷூ புண்ணியகாலம்.
சித்திரை – 2 (ஏப்ரல் 15) புதன்கிழமை – பிரதோஷம். மத்ஸ்ய அவதார தினம், மாத சிவராத்திரி.
சித்திரை – 3 (ஏப்ரல் 16) வியாழக்கிழமை – போதாயன அமாவாசை.
சித்திரை – 4(ஏப்ரல் 17) வெள்ளிக்கிழமை – அமாவாசை, மேலும் இன்று அஷ்டமா சித்துக்களையும் கைவரப் பெற்ற சித்த மகா புருஷர்களான வரருசியார் மற்றும் காலிங்கநாதரின் திருநட்சத்திரம்.
சித்திரை – 6 (ஏப்ரல் 19) ஞாயிற்றுக்கிழமை – கிருத்திகை விரதம்.
சித்திரை – 7 (ஏப்ரல் 20) திங்கட்கிழமை – அட்சய திருதியை.
சித்திரை – 8 (ஏப்ரல் 21) செவ்வாய்க்கிழமை – ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் ஜெயந்தி.
சித்திரை – 9 (ஏப்ரல் 22) புதன்கிழமை – ஸ்ரீ மத் ராமானுஜய ஜெயந்தி, சஷ்டி விரதம்.
சித்திரை – 14 (ஏப்ரல் 27) திங்கட்்கிழமை – சர்வ ஏகாதசி.
சித்திரை – 16 (ஏப்ரல் 29) புதன்கிழமை – பிரதோஷம். மேலும் இன்று சித்த மகா புருஷர் கருவூராரின் ஜென்ம நட்சத்திரம்.
சித்திரை – 17 (ஏப்ரல் 30) வியாழக்கிழமை – ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி.
சித்திரை – 18 (மே 1) வெள்ளிக்்கிழமை – பெளர்ணமி விரதம்
சித்திரை – 19 (மே 2) சனிக்கிழமை – வைசாக பௌகுளம்
சித்திரை – 21 (மே 4) திங்கட்கிழமை – அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
சித்திரை – 22 (மே 5) செவ்வாய்க்கிழமை – சங்கடஹர சதுர்த்தி
சித்திரை – 26 (மே 9) சனிக்கிழமை – சிரவண விரதம் – ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
சித்திரை – 30 (மே 13) புதன் கிழமை – சர்வ ஏகாதசி.
சித்திரை – 31 (மே 14) வியாழக்கிழமை – பிரதோஷம்.
வைகாசி
வைகாசி – 2 (மே 16) சனிக்கிழமை – சர்வ அமாவாசை, கிருத்திகை விரதம்.
வைகாசி – 6 (மே 20) புதன்்்கிழமை – சதுர்த்தி விரதம்.
வைகாசி 8 – (மே 22) வெள்ளிக்்கிழமை – சஷ்டி விரதம்.
வைகாசி 12- (மே 26) செவ்வாய்க்்கிழமை – குரு பகவான், கடக ராசிக்கு மாறுதல்.
வைகாசி – 14 (மே 28) வியாழக்்கிழமை – அக்னி நட்சத்திரம் நிவர்்த்தி, பிரதோஷம்.
வைகாசி 16 – (மே 30) சனிக்கிழமை – பௌர்ணமி விரதம்.
வைகாசி 17 – (மே 31) ஞாயிற்றுக்கிழமை – காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஜெயந்தி.
வைகாசி 21 – (ஜூன் 4) வியாழக்கிழமை – சங்கட ஹர சதுர்த்தி – சுப முகூர்த்த தினம்
வைகாசி 22 – (ஜூன் 05) வெள்ளிக்கிழமை – சிரவண விரதம்.
வைகாசி 24 – (ஜூன் 7) ஞாயிற்றுக்கிழமை – பானு ஸப்தமி.
வைகாசி 28 – (ஜூன் 11) வியாழக்்கிழமை – சர்வ ஏகாதசி
வைகாசி 29 – (ஜூன் 12) வெள்ளிக்்கிழமை – பிரதோஷம்.
வைகாசி 30 – (ஜூன் 13) சனிக்கிழமை – மாத சிவராத்திரி, கிருத்திகை விரதம்.
வைகாசி 31 – (ஜூன் 14) ஞாயிற்றுக்கிழமை – சர்வ அமாவாசை.
ஆனி
ஆனி 1 (ஜூன் 15) திங்கட்கிழமை – ஆனி மாதப் பிறப்பு. ஷடசீதி புண்ணியக் காலம்.
ஆனி 4 (ஜூன் 18) வியாழக்கிழமை – சதுர்த்தி விரதம்.
ஆனி 6 (ஜூன் 20) சனிக்கிழமை – சஷ்டி விரதம்.
ஆனி 07 (ஜூன் 21) ஞாயிற்றுக்கிழமை – பானுஸப்தமி
ஆனி 08 (ஜூன் 22) திங்கட்கிழமை – ஆனித் திருமஞ்சனம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
ஆனி 11 (ஜூன் 25 வியாழக்கிழமை – சர்வ ஏகாதசி.
ஆனி 13 (ஜூன் 27) சனிக்கிழமை – சனிப் பிரதோஷம்.
ஆனி 15 (ஜூன் 29) திங்கட்கிழமை – வட சாவித்திரி விரதம்
ஆனி 17 (ஜூலை 01) புதன்்கிழமை – ஜேஷ்ட பகுளப் பிரதமை
ஆனி 19 (ஜூலை 03) வெள்ளிக்கிழமை – சங்கட ஹர சதுர்த்தி.
ஆனி 26 (ஜூலை 10) வெள்ளிக்கிிழமை – கிருத்திகை விரதம். மேலும், இன்றைய தினம் சித்த மகா புருஷர் ரோமரிஷி-யின் அவதாரப் புண்ணிய தினம்.
ஆனி 27 (ஜூலை 11) சனிக்கிழமை – கூர்ம ஜெயந்தி.
ஆனி 28 (ஜூலை 12) ஞாயிற்றுக்கிழமை – பிரதோஷம், மாத சிவராத்திரி.
ஆனி 29 (ஜூலை 13) திங்கட்கிழமை – போதாயன அமாவாசை.
ஆனி 30 ஜூலை 14 செவ்வாய்க்கிழமை – அமாவாசை.
ஆனி 31 (ஜூலை 15) புதன்கிழமை – ஆஷாட சுத்த பிரதமை.
ஆனி 32 (ஜூலை 16) வியாழக்கிழமை – அமிர்த லட்சுமி விரதம்.
ஆடி
ஆடி 01 (ஜூலை 17) வெள்ளிக்கிழமை – தக்ஷிணாயன புண்ணியக் காலம் – ஆடி மாதப் பிறப்பு.
ஆடி 03 (ஜூலை 19) ஞாயிற்றுக் கிழமை – சஷ்டி விரதம்.
ஆடி 09 (ஜூலை 25) சனிக் கிழமை – சர்வ ஏகாதசி (ஆஷாட சுத்த ஏகாதசி).
ஆடி 10 (ஜூலை 26) ஞாயிற்றுக் கிழமை – பிரதோஷம் – சதுர்மாத விரத ஆரம்பம்.
ஆடி 13 (ஜூலை 29) புதன்் கிழமை – பௌர்ணமி விரதம், வியாஸ பூஜை. குரு பூர்ணிமா.
ஆடி 14 (ஜூலை 30) வியாழக்கிழமை – ஆஷாட பகுளம் – சிரவண விரதம்.
ஆடி 17 (ஆகஸ்ட்02) ஞாயிற்றுக் கிழமை – சங்கட ஹர சதுர்த்தி.
ஆடி 18 (ஆகஸ்ட்03) திங்கட்் கிழமை – ஆடி 18-ம் பெருக்கு. – காவிரி பூஜை விசேஷம்.
ஆடி 19 (ஆகஸ்ட்04) செவ்வாய் கிழமை – சங்கட ஹர சதுர்த்தி.
ஆடி 21 (ஆகஸ்ட் 06) வியாழக்்கிழமை – கிருத்திகை விரதம்.
ஆடி 24 (ஆகஸ்ட் 09) ஞாயிற்றுக்கிழமை – சர்வ ஏகாதசி.
ஆடி 26 (ஆகஸ்ட் 11) செவ்வாய்க்கிழமை – மாத சிவராத்திரி.
ஆடி 27 (ஆகஸ்ட் 12) புதன்கிழமை – சர்வ அமாவாசை.
ஆடி 29 (ஆகஸ்ட் 14) வெள்ளிக்கிழமை – திருவாடிப் பூரம்.
ஆடி 30 (ஆகஸ்ட் 15) சனிக்்கிழமை – சுதந்திர தினம்.
ஆடி 31 (ஆகஸ்ட் 16) ஞாயிற்றுக்கிழமை – சதுர்த்தி விரதம்.
ஆடி 32 (ஆகஸ்ட் 17) திங்கட்்கிழமை – நாக பஞ்சமி, கருட பஞ்சமி, விஷ்ணுபதி புண்ணியக் காலம்.
ஆவணி
ஆவணி 01 (ஆகஸ்ட் 18) செவ்வாய்க்கிழமை – சஷ்டி விரதம்.
ஆவணி 04 (ஆகஸ்ட் 21) வெள்ளிக்கிழமை – ஸ்ரீ வரலட்சுமி விரதம்.
ஆவணி 06 (ஆகஸ்ட் 23) ஞாயிற்றுக்கிழமை – சர்வ ஏகாதசி.
ஆவணி 08 (ஆகஸ்ட் 25) செவ்வாய்க்கிழமை – பிரதோஷம்
ஆவணி 9 (ஆகஸ்ட் 26) புதன் கிழமை – ருக் உபாகர்மா, ஓணம் பண்டிகை, ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
ஆவணி 10 (ஆகஸ்ட் 27) வியாழக்கிழமை பௌர்ணமி விரதம், யஜுர் உபாகர்மா, ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி
ஆவணி 11 (ஆகஸ்ட் 28) வெள்ளிக்்கிழமை – காயத்ரி ஜெபம்.
ஆவணி 12 (ஆகஸ்ட் 29) சனிக்கிழமை சிரவண பகுள பிரதமை.
ஆவணி 14 (ஆகஸ்ட் 31) திங்கட்்கிழமை – சங்கடஹர சதுர்த்தி. சித்த மகா புருஷர் சுந்தரனாரின் திருநட்சத்திரம்.
ஆவணி 17 (செப்டம்பர் 3) வியாழக்கிழமை – கிருத்திகை விரதம்.
ஆவணி 18 (செப்டம்பர் 4) வெள்ளிக்்கிழமை – கிருஷ்ண ஜெயந்தி.
ஆவணி 21 (செப்டம்பர் 7) திங்கட்கிழமை – சர்வ ஏகாதசி.
ஆவணி 22 (செப்டம்பர் 08) செவ்வாய்க்கிழமை – பிரதோஷம்.
ஆவணி 23 (செப்டம்பர் 09) புதன்க்கிழமை – மாத சிவராத்திரி.
ஆவணி 24 (செப்டம்பர் 10) வியாழக்கிழமை – சர்வ அமாவாசை.
ஆவணி 28 (செப்டம்பர் 14) திங்கட்கிழமை – ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி.
ஆவணி 29 (செப்டம்பர் 15) செவ்வாய்க்கிழமை – ரிஷி பஞ்சமி.
ஆவணி 30 (செப்டம்பர் 16) புதன்கிழமை – சஷ்டி விரதம்.
ஆவணி 31 (செப்டம்பர் 17) வியாழக்கிழமை – ஷடசீதி புண்ணியக் காலம்.
புரட்டாசி
புரட்டாசி 1 (செப்்டம்பர் 18) வெள்ளிக்்கிழமை – ஜேஷ்டாஷ்டமி.
புரட்டாசி 2 (செப்டம்பர் 19) சனிக்்கிழமை – தூர்வாஷ்டமி.
புரட்டாசி 3 (ெசப்டம்பர் 20) ஞாயிற்றுக்கிழமை – கேதார விரதம் ஆரம்பம்.
புரட்டாசி 5 (செப்டம்பர் 22) செவ்வாய்க்கிழமை – சர்வ ஏகாதசி, சிரவண விரதம்.
புரட்டாசி 6 (செப்டம்பர் 23) புதன் கிழமை – ஸ்ரீ வாமன ஜெயந்தி.
புரட்டாசி 7 (செப்டம்பர் 24) வியாழக்்கிழமை – பிரதோஷம்.
புரட்டாசி 8 (செப்டம்பர் 25) வெள்ளிக்கிழமை – ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
புரட்டாசி 09 (செப்டம்பர் 26 சனிக்்கிழமை – பௌர்ணமி விரதம், ஸ்ரீ உமா மகேஸ்வரி விரதம்.
புரட்டாசி 10 (செப்டம்பர் 27) ஞாயிற்றுக்கிழமை – மகாளயபட்சம் ஆரம்பம்.
புரட்டாசி 12 (செப்டம்பர் 29) செவ்வாய்க்கிழமை – மகா பரணி, சங்கட ஹர சதுர்த்தி.
புரட்டாசி 13 (செப்டம்பர் 30) புதன்்கிழமை – கிருத்திகை விரதம்.
புரட்டாசி 16 (அக்டோபர் 03) சனிக்கிழமை – மத்தியாஷ்டமி.
புரட்டாசி 19 (அக்டோபர் 06) செவ்வாய்க்கிழமை – சர்வ ஏகாதசி.
புரட்டாசி 20 (அக்டோபர் 07) புதன்கிழமை – சன்யஸ்த மாளயம்.
புரட்டாசி 21 (அக்டோபர் 08) வியாழக்கிழமை – பிரதோஷம்.
புரட்டாசி 22 (அக்டோபர் 09) வெள்ளிக்கிழமை – மாத சிவராத்திரி.
புரட்டாசி 23 (அக்டோபர் 10) சனிக்கிழமை – மகாளய அமாவாசை.
புரட்டாசி 24 (அக்டோபர் 11) ஞாயிற்றுக்கிழமை – சாரதா நவராத்திரி பூஜை ஆரம்பம்.
புரட்டாசி 27 (அக்டோபர் 14) புதன்்கிழமை – சதுர்த்தி விரதம்.
புரட்டாசி 29 (அக்்டோபர் 16) வெள்ளிக்கிழமை – ஐப்பசி மாதப் பிறப்பு, துலாக் காவேரி ஸ்நான ஆரம்பம், துர்க்காஷ்டமி.
ஐப்பசி
ஐப்பசி 2 (அக்டோபர் 19) திங்கட்கிழமை – சிரவண விரதம், மகா நவமி. சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை.
ஐப்பசி 3 (அக்டோபர் 20) செவ்வாய்க்கிழமை – விஜயதசமி. குரு பெயர்ச்சி.
ஐப்பசி 4 (அக்டோபர் 21) புதன்கிழமை – துளசி – கௌரி விரதம்.
ஐப்பசி 5 (அக்டோபர் 22) வியாழக்கிழமை – சர்வ ஏகாதசி.
ஐப்பசி 6 (அக்டோபர் 23) வெள்ளிக்கிழமை – பிரதோஷம்.
ஐப்பசி 8 (அக்டோபர் 25) ஞாயிற்றுக்கிழமை – பௌர்ணமி விரதம், அன்னாபிஷேகம்.
ஐப்பசி 10 (அக்டோபர் 27) செவ்வாய்க்கிழமை – கிருத்திகை விரதம்.
ஐப்பசி 12 (அக்டோபர் 29) வியாழக்கிழமை – சங்கட ஹர சதுர்த்தி.
ஐப்பசி 19 (நவம்பர் 5) வியாழக்கிழமை – சர்வ ஏகாதசி.
ஐப்பசி 20 ( நவம்பர் 6) வெள்ளிக்்கிழமை – பிரதோஷம், எம தீபம் – எம தர்ம ராஜனுக்கு தீபங்கள் ஏற்றி வைத்து பூஜிப்பது மகத்தான புண்ணிய பலனைத் தரும்.
ஐப்பசி 21 (நவம்பர் 7) சனிக்்கிழமை – இரவு நரக சதுர்த்தசி ஸ்நானம். – கங்்கா தீர்த்த ஸ்நான பலன் கிட்டும்.
ஐப்பசி 22 (நவம்பர் 8) ஞாயிற்றுக்கிழமை – தீபாவளிப் பண்டிகை, கேதார கௌரி விரதம், ஸ்ரீ லட்சும்ி – குபேர பூஜை விசேஷம், சர்வ அமாவாசை.
ஐப்பசி 24 (நவம்பர் 10) செவ்வாய்க்கிழமை – கந்தர் சஷ்டி விரதம் ஆரம்பம்.
ஐப்பசி 25 (நவம்பர் 11) புதன்கிழமை – எம துதிகை. – எம தர்மராஜரைப் பூஜிக்க வேண்டிய புண்ணிய தினம்.
ஐப்பசி 27 (நவம்பர் 13) வெள்ளிக்்கிழமை – நாக சதுர்த்தி – பாம்பு புற்றிற்கு பால் சேர்ப்பது பரம புண்ணியத்தைத் தரும், நாக சதுர்த்தி.
ஐப்பசி 29 (நவம்பர் 15) ஞாயிற்றுக்கிழமை – சஷ்டி விரதம்- சூரசம்ஹாரம். திருச்செந்தூர், சிக்கல் தரிசனம் விசேஷம்.
ஐப்பசி 30 (நவம்பர் 16 திங்கட்கிழமை) – கடைமுகம் – காவிரி ஸ்நானம் விசேஷம்.
கார்த்திகை
கார்த்திகை 1 (நவம்பர் 17) செவ்வாய்க்கிழமை – முடவன் முழுக்கு.
கார்த்திகை 4 (நவம்பர் 20) வெள்ளிக்்கிழமை – சர்வ ஏகாதசி.
கார்த்திகை 5 (நவம்பர் 21) சனிக்்கிழமை – ஸ்ரீ யாக்ஞ வல்கியர் அவதார தினம். சாதுர் மாஸ்ய விரத பூர்த்தி.
கார்த்திகை 6 (நவம்பர் 22) ஞாயிற்றுக்கிழமை – பிரதோஷம்.
கார்த்திகை 7 (நவம்பர் 23) திங்கட்கிழமை – பரணி தீபம்.
கார்த்திகை 8 (நவம்பர் 24) செவ்வாய்க்கிழமை – அண்ணாமலையார் தீபம். பௌர்ணமி, கிருத்திகை விரதம். வாஸ்து நாள்.
கார்த்திகை 9 (நவம்பர் 25) புதன்கிழமை – கார்த்திகை தீபம்.
கார்த்திகை 11 (நவம்பர் 27) வெள்ளிக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி.
கார்த்திகை 18 (டிசம்பர் 4) வெள்ளிக்கிழமை – சர்வ ஏகாதசி.
கார்த்திகை 20 (டிசம்பர் 6) ஞாயிற்றுக்கிழமை – பிரதோஷம்.
கார்த்திகை 21 (டிசம்பர் 7) திங்கட்கிழமை – மாத சிவராத்திரி.
கார்த்திகை 22 (டிசம்பர் 8) செவ்வாய்க்கிழமை – சர்வ அமாவாசை.
கார்த்திகை 27 (டிசம்பர் 13) ஞாயிற்றுக்கிழமை – சதுர்த்தி விரதம், சிரவண விரதம்.
கார்த்திகை 29 (டிசம்பர் 15) செவ்வாய்க்கிழமை – சஷ்டி விரதம்.
மார்கழி
மார்கழி 1 (டிசம்பர் 16) புதன்கிழமை – தனுர்மாதப் பூஜை ஆரம்பம், ஷடசீதி புண்ணிகாலம் ஆரம்பம்.
மார்கழி 5 (டிசம்பர் 20) ஞாயிற்றுக்கிழமை – வைகுண்ட ஏகாதசி.
மார்கழி 6 (டிசம்பர் 21) திங்கட்்கிழமை – பிரதோஷம், கிருத்திகை விரதம்.
மார்கழி 8 (டிசம்பர் 23) புதன்்கிழமை – பௌர்ணமி விரதம், ஸ்ரீ தத்தாத்ரேய அவதார தினம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
மார்கழி 9 (டிசம்பர் 24) வியாழக்்கிழமை – ஆருத்ரா தரிசனம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
மார்கழி 10 (டிசம்பர் 25) வெள்ளிக்கிழமை – ஸ்ரீ ரமண பகவான் அவதார தினம். பரசுராம ஜெயந்தி.
மார்கழி 12 (டிசம்பர் 27) ஞாயிற்றுக்கிழமை – சங்கட ஹர சதுர்த்தி.
மார்கழி 14 (டிசம்பர் 29) செவ்வாய்க்கிழமை – தேய்பிறை சஷ்டி விரதம்.
மார்கழி 23 (ஜனவரி 7, 2027) வியாழக்கிழமை – ஸ்ரீ அனுமன் ஜெயந்தி.
மார்கழி 27 (ஜனவரி 11) திங்கட்கிழமை – கூடாரவல்லி.
மார்கழி 30 (ஜனவரி 14) வியாழக்
கிழமை – போகிப் பண்டிகை.
தை
தை 1 (ஜனவரி 15) வெள்ளிக்்்கிழமை – பொங்கல் பண்டிகை.
தை 2 (ஜனவரி 16) சனிக்்்்கிழமை – மாட்டுப் பொங்கல்.
தை 8 (ஜனவரி 22) வெள்ளிக்்்கிழமை – தைப்பூசத் திருவிழா.
தை 12 (ஜனவரி 26) செவ்வாய்க்்்கிழமை – திருவையாறு தியாக பிரம்மேந்திராள் ஆராதனை.
தை 23(பிப்ரவரி 06) சனிக்கிழமை – தை அமாவாசை
தை 24 (பிப்ரவரி 07) ஞாயிற்றுக்கிழமை – மக ஸ்நானம்.
தை 27 (பிப்ரவரி 10) புதன்கிழமை – வரகுந்த சதுர்த்தி.
மாசி
மாசி 1 (பிப்ரவரி 13) சனிக்கிழமை – விஷ்ணுபதி புண்ணியக்காலம்.
மாசி 8 (பிப்ரவரி 20) சனிக்கிழமை – கங்கண சந்திர கிரகணம்.
மாசி 9 (பிப்ரவரி 21) ஞாயிற்றுக்கிழமை – மாசி மகம் விசேஷம்.
மாசி 22 (மார்ச் 6) சனிக்கிழமை – மகா சிவராத்திரி.
மாசி 24 (மார்ச் 08) திங்கட்கிழமை – சர்வ அமாவாசை.
மாசி 25 (மார்ச் 9) செவ்வாய்க்கிழமை – பால்குண சுத்த பிரதமை.
மாசி 29 (மார்ச் 13) சனிக்கிழமை – கிருத்திகை விரதம்.
மாசி 30 (மார்ச் 14) ஞாயிற்றுக்கிழமை – சஷ்டி விரதம்.
பங்குனி
பங்குனி 1 (மார்ச் 15) திங்கட்கிழமை- பங்குனி மாதப் பிறப்பு. ஷடசீதி புண்ணியக் காலம். காரடையான் நோன்பு.
பங்குனி 4 (மார்ச் 18) வியாழக்கிழமை – சர்வ ஏகாதசி.
பங்குனி 6 (மார்ச் 20) சனிக்கிழமை – சனிப் பிரதோஷம். காம தகனம்.
பங்குனி 7 (மார்ச் 21) ஞாயிற்றுக்்கிழமை – பெளர்ணமி பூஜை.
பங்குனி 8 (மார்ச் 22) திங்கட்கிழமை –
பங்குனி உத்திரம். ஹோலிப் பண்டிகை.
பங்குனி 09 (மார்ச் 23) செவ்வாய்க்கிழமை – பால்குன பகுள பிரதமை.
பங்குனி 11 (மார்ச் 25) வியாழக்கிழமை – சங்கடஹர சதுர்த்தி.
பங்குனி 18 (ஏப்ரல் 1) வியாழக்கிழமை – சிரவண விரதம்.
பங்குனி 19 (ஏப்ரல் 2) வெள்ளிக்கிழமை – சர்வ ஏகாதசி.
பங்குனி 21 (ஏப்ரல் 4) ஞாயிற்றுக்கிழமை – பிரதோஷம். சுப முகூர்த்த தினம்.
பங்குனி 22 (ஏப்ரல் 5) திங்கட்கிழமை – மாத சிவராத்திரி.
பங்குனி 23 (ஏப்ரல் 6) செவ்வாய்க்கிழமை – சர்வ அமாவாசை.
பங்குனி 24 (ஏப்ரல் 7) புதன்கிழமை – யுகாதிப் பண்டிகை. சித்த பிரதமை. வஸந்த நவராத்திரி.
பங்குனி 25 (ஏப்ரல் 8) வியாழக்கிழமை – சுப முகூர்த்த தினம்.
பங்குனி 26 (ஏப்ரல் 9) வெள்ளிக்கிழமை – கிருத்திகை விரதம். சௌபாக்கிய கௌரி விரதம்.
பங்குனி 27 (ஏப்ரல் 10) சனிக்கிழமை – சக்தி கணபதி விரதம்.
பங்குனி 29 (ஏப்ரல் 12) திங்கட்கிழமை – சஷ்டி விரதம்.
பங்குனி 30 (ஏப்ரல் 13) செவ்வாய்க்கிழமை – சந்தான சப்தமி.
