சென்னையில் மருத்துவர்கள் மாநாடு

சென்னை: சென்னையில் நடைபெற்ற மருத்துவர்கள் மாநாடில் மருத்துவர்கள், நிர்வாகிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட 2,500 பங்கேற்றனர். அங்கீகரிக்கப்பட்ட சுகாதார அமைப்புகளின் கூட்டமைப்பு (CAHO) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி சுகாதாரத் தர மாநாடான ‘கஹோகான் (CAHOCON) 2026’-ன் 10-வது பதிப்பை, இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு சென்னையில் தொடங்கி வைத்தார். கடந்த 10ம் தேதி தொடங்கி வைத்த மாநாடு நேற்று வரை நடைபெற்றது.

நோயாளிகளின் பாதுகாப்பு, சுகாதாரத் தரம், அங்கீகாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் குறித்த முன்னேற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் மருத்துவர்கள், நிர்வாகிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட 2,500 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட நிகழ்வாக நடைபெற்றது. இந்த மாநாட்டு நிகழ்வுடன் இணைந்து முன்னணி மருத்துவ உபகரண உற்பத்தியாளர்கள், டிஜிட்டல் சுகாதார நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் அதிநவீன தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விளக்கிக்கூறும் 200க்கும் மேற்பட்ட அரங்குகளைக் கொண்ட மிகப்பெரிய சுகாதார கண்காட்சி நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த 32 முன்னணி மருத்துவமனைகளின் ஈடுபாட்டுடன் உள்ளடக்கிய 40க்கும் மேற்பட்ட பயிலரங்குகள் மாநாட்டுக்கு முன்நிகழ்வுகளாக நடத்தப்பட்டன. இதில் பங்கேற்பாளர்களுக்குத் தர மேம்பாடு மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு குறித்த செய்முறைப் பயிற்சியும், நடைமுறைக்கு உகந்த உத்திகளும் கற்பிக்கப்பட்டன.

Related Stories: