சென்னை: தமிழ்நாட்டில் 7 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது. வேலூர், ஈரோட்டில் தலா 102, மதுரை விமான நிலையம், நாமக்கல்லில் தலா 101 டிகிரி பாரன்ஹீர் வெயில் பதிவாகியுள்ளது. தருமபுரி, திருச்சியில் தலா 100 டிகிரி பாரன்ஹீர் வெயில் பதிவானது.
