முசிறி – சென்னை ரயில் பாதை திட்டம் எப்போது நிறைவேறும்?: பயணிகள் எதிர்பார்ப்பு

சென்னை: முசிறி – சென்னை ரயில் பாதை திட்டம் எப்போது நிறைவேறும் என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த முசிறி- சென்னை ரயில் இணைப்பு திட்டம் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டத்தின் பாதை வரையறை தற்போது புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ரயில்வே வரைபடங்களில் இடம்பெற்றுள்ளது, இது திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் பாதை துறையூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய முக்கியமான நகரங்கள் வழியாக செல்லும் என்று தெரிகிறது.

பெரம்பலூர் தற்போது நேரடி ரயில் வசதியே இல்லாத நகரமாக உள்ளது, இந்த திட்டம் நிறைவேறினால் அந்த நகரத்திற்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும். அங்கிருந்து ரயில் பாதை சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி வழியாக நீண்டு, வடக்கு தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் ரயில் வழித்தடங்களுடன் இணைக்கப்படும்.

இந்த திட்டம் முழுமையாக நிறைவேறும் பட்சத்தில், முசிறி முதல் சென்னை வரை நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும். இது வழியில் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். மக்கள் இந்த திட்டம் விரைவாக நிறைவேறும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதே சமயம் வரைபடத்தில் கோடு வரைந்தால் மட்டும் போதாது, திட்டம் எப்போது நிறைவேறும் என்ற தெளிவான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வழங்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: