சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் கடந்த 8ம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பேசியதால் சீமான் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் (223ஏ) வழக்கு பதியப்பட்டுள்ளது.
