சென்னை: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் காட்சிகள் கசிவு என்பது தவெகவின் தேர்தல் வியூகமாக கூட இருக்கலாம் என்று பாஜ மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் கூறியுள்ளார். தமிழக பாஜ மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். நடிகர் விஜய்க்கு மக்கள் மத்தியில் ஒருவிதமான எதிர்பார்ப்பை தக்கவைக்க, ‘ஜனநாயகன்’ படக் காட்சிகளை ஆதவ் அர்ஜுனாவே கசியவிட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகிறது. அமைச்சர்களுக்கு வேலை அதிகம் இருக்கும். ஆனால் வேலையே இல்லாமல் சும்மா இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. படக் காட்சிகள் தயாரிப்பு தரப்பு அல்லது விஜய் தரப்பில் இருந்து மட்டுமே கசிய வாய்ப்புள்ளது. இது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூகமாக கூட இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
