போபால்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா மூலம் புகழ்பெற்றவர் மோனாலிசா. இதன் பிறகு ஏராளமான விளம்பரப் படங்களிலும், பின்னர் சினிமாவிலும் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து பர்மான் கான் என்பவரை இவர் திருமணம் செய்தார். தற்போது இவர் கொச்சியில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது கணவர் பர்மான் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பமேளாவில் புகழ்பெற்ற மோனாலிசா ஒரு மைனர் என்பது விசாரணையில் உறுதியானதையடுத்து, அவரது கணவர் பர்மான் கான் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் ஆய்வில் மோனாலிசா 2009ல் பிறந்தவர் என்பதும், திருமணத்திற்காக வயது சான்றிதழ்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆவண மோசடி தொடர்பாக மத்தியப் பிரதேச போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
