புதுடெல்லி: பீகாரில் நீண்ட காலம் முதல்வராக பணியாற்றி சாதனை படைத்த ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் கடந்த மார்ச் 16ம் தேதி மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிதிஷ்குமாருக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
