ஜல் ஜீவன் திட்டத்தில் ஊழல் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுபோத் கைது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஜல் ஜீவன் இயக்கம் தொடர்பான பல கோடி ரூபாய் ஊழல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுபோத் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி பல நூறுகோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் ஊழல் தடுப்புப்பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த வழக்கில் நீண்ட காலமாக கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துவந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுபோத் அகர்வாலுக்கு எதிராக ஜெய்ப்பூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுபோத் அகர்வால் நேற்று முன்தினம் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த ஊழல் வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரின் கைது நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளது.

Related Stories: