சாதி வாரி கணக்கெடுப்புக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி: மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும் ஒன்றிய அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவெடுத்துள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த மனுவை முதலில் ஏற்க முடியாது. ஏனெனில் நாகரிகமற்ற மொழிகளின் சொற்களால் மனுவை தயாரித்துள்ளீர்கள்.

இதனை அனுமதிப்பது என்பது கண்டிப்பாக சாத்தியம் கிடையாது. என்று கூறினார். இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதுபோன்ற சொற்களுக்காக மன்னிப்பு கேட்பதாக கூறினார். ஆனால் அதனை நிராகரிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்,‘‘சாதி வாரி கணக்கெடுப்பு என்பது அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாகும். அதில் தலையிட நீதிமன்றத்திற்கு எந்தவித முகாந்திரமும் கிடையாது’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: