சீர்காழி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் மாணவிகளின் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சீர்காழி, ஏப். 9: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. சீர்காழி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான சுரேஷ் தலைமையில் கல்லூரி மாணவர்கள் 100 வடிவில் நின்று அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் வாக்களிப்பது நமது கடமை என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜரத்தினம், தலைமை இடத்து தனி தாசில்தார் பாபு, தேர்தல் தனி வட்டாட்சியர் சரவணன், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் பாலாஜி, லயன்ஸ் சக்திவீரன், கல்லூரி முதல்வர் சுகந்தி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: