விருதுநகர், ஏப்.9: விருதுநகர் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்.21 முதல் ஏப்.23ம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே.4ம் தேதி என மொத்தம் நான்கு நாட்கள் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சுகபத்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் எஃப்எல் ஒன், எஃப்எல் 3, எப்எல் 3ஏ உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 21ம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரையிலும், அதனைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 4ம் தேதியும் என மொத்தம் நான்கு நாட்கள் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.
