திண்டுக்கல், ஏப். 9: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் பெண்களுக்கான லீக் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. முதலில் நடைபெற்ற போட்டியில் அங்கு விலாஸ் அணி, திண்டுக்கல் விளையாட்டு மேம்பாட்டு அணியை 3:1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இரண்டாவது போட்டியில் திண்டுக்கல் விளையாட்டு மேம்பாட்டு அணி, செயிண்ட் ஆண்டனிஸ் அணியை 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் தேவதர்ஷினி 3 கோல்கள் அடித்தார். அங்கு விலாஸ் அணி, பிரசித்தி அணியை 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் ஆனந்தி 2 கோல்கள், நயானா ஒரு கோல் அடித்தார். இத்தகவலை மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
