அந்தியூர் அருகே சாலையில் திரிந்த ஒற்றை காட்டு யானை

அந்தியூர், ஏப்.9: அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணைப்பகுதி வன சோதனை சாவடியில் இருந்து செலம்பூர் அம்மன் கோயில் செல்லும் சாலையில் நேற்று காலை ஆண் யானை ஒன்று உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வந்தது. இது அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக முகாமிட்டது. இதனை அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்குகள் விரட்டியடித்தனர்.

தொடர்ந்து வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம பகுதிகளுக்குள் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகிறது.யானை நடமாட்டம் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படுவதால், நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வனப்பகுதியில் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரப்ப வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதி சாலைகளில் செல்லும் பொதுமக்கள் கவனத்துடன் செல்லமாறு வனத்துறையினர் அறிவுறுத்திள்ளனர்.

 

Related Stories: