வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஏப்.9: ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய தாலுகா அலுவலகத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதியன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி, அந்தந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய தாலுகா அலுவலகத்தில் உள்ள அறையில் சுமார் 369 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

 

Related Stories: