கைப்பை பறித்தவர் கைது

மதுரை, ஏப். 9: சென்னையில் இருந்து மதுரை வந்த ரயிலில் பெண் பயணி ஒருவரிடம் இருந்த கைப்பையை பறித்துக்கொண்டு தப்பினார். அதில் லேப்டாப் செல்போன் மற்றும் பணம் இருந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் துரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்ரி தலைமையில் தனிப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மோகனமூர்த்தி என தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்டவை மீட்கப்பட்டன.

 

Related Stories: