அணைகள் நீர்மட்டம் சரிவு

கூடலூர், ஏப்.9: தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக பெரியாறு அணை உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்று நிலவரப்படி பெரியாறு அணைக்கு நீர்வரத்து பூஜ்ஜியமானது. அணையின் நீர்மட்டம் 111.05 அடியாக உள்ளது. நீர் இருப்பு 1,078 மி.க.அடியாக உள்ளது.

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை இல்லாததால் வைகை அணைக்கு நீர்வரத்து 159 கனஅடியாக குறைந்த நிலையில், மொத்தம் 71 அடி உயரம் கொண்ட அணையில், நீர்மட்டம் 35.43 அடியாக சரிந்துள்ளது. மேலும் மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகளின் நீர்மட்டமும் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

 

Related Stories: