தாராபுரம், ஏப். 9: தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 9வது வார்டு பகுதிகளான சொக்கநாத பாளையம், மீனாட்சிபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளர் டாக்டர் இந்திராணிக்கு உதயசூரியின் சின்னத்தில் வாக்கு கேட்டு திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில், நகர திமுக செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
நகர அவைத்தலைவர் கதிரவன், வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி, வார்டு செயலாளர் மயில்சாமி, முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் சொக்கநாத பாளையம் பள்ளிவாசல் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களிடம் அங்கு செய்து முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை எடுத்துக்கூறி வாக்கு கேட்டனர்.
