நரிக்குறவர் இன மக்களிடையே வாய்மேட்டில் 100 சதவீத வாக்கு பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி 24 மணி நேர கண்காணிப்பு

வேதாரண்யம், ஏப். 9: வேதாரண்யம் தாலுகா வாய்மேட்டில் 100% வாக்களிக்க வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் வட்டாட்சியர் தேர்தல் உதவி அலுவலர் ஜெயசீலன் தலைமை வகித்து நரிக்குறவர் இன மக்களோடு கலந்துரையாடல் நடத்தினார். அப்போது நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும். வாக்கு நமது உரிமை. நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என எடுத்துரைத்து விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை சேர்ந்த சுகந்தி, தங்கதுரை மற்றும் இருபதுக்கு மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவிகள் பேரணி, கையெழுத்து இயக்கம், மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்தில் பிரச்சாரம், கிராமங்கள் தோறும் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என தேர்தல் உதவி அலுவலர் வட்டாட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.

 

Related Stories: