சங்கரன்கோவில், ஏப்.9: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சங்கை கணேசன் போட்டியிடுகின்றார். அவர் நேற்று சங்கரன்கோவிலில் முஸ்லிம் ஜமாத் கமிட்டி தலைவர் அப்துல் காதர், செயலாளர் நயினார்முகமது, துணைத்தலைவர் ஹக்கீம், பொருளாளர் அப்பாஸ், இணைப்பொருளாளர் அப்பாஸ் அலி, ஜமாத் உறுப்பினர்கள் செய்யது இப்ராஹிம்ஷா, ஜஹாங்கீர், பீர்மைதீன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் பிரகாஷ், காங்கிரஸ் நிர்வாகிகள் மணிகண்டன், வக்கீல் கண்ணன், திமுக மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ் அலி, சிறுபான்மையினர் அணி ஜிந்தாமைதீன் வர்த்தக அணி அப்துல் ரகுமான்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், மற்றும் ராஜா மைதீன், ஷேக் மைதீன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
சங்கரன்கோவிலில் ஜமாத் நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்
- காங்கிரஸ்
- ஜமாத்
- சங்கரன்கோவில்
- சங்கை கணேசன்
- திமுக
- முஸ்லிம் ஜமாத் குழு
- ஜனாதிபதி
- அப்துல் காதர்
- நைனார் முகமது
- துணை ஜனாதிபதி
- ஹக்கீம்
- பொருளாளர்
- அப்பாஸ்
