வட மாநில தலைவர்களுடன் பாஜ வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்

சென்னை: பாஜ வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின் போது ஒன்றிய அமைச்சர்கள், தேசிய நிர்வாகிகள் உடனிருந்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடும் இழுபறிக்கு மத்தியில் பாஜ வேட்பாளர் பட்டியல் கடந்த 3ம் தேதி வெளியானது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் அவினாசி தொகுதியிலும், நயினார் நாகேந்திரன்- சாத்தூர், மயிலாப்பூர்-தமிழிசை சவுந்தரராஜன், கோவை வடக்கு- வானதி சீனிவாசன் போட்டியிடுகின்றனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள 27 பாஜ வேட்பாளர்களும் அவரவர்களுக்கு உட்பட்ட தொகுதிகளில் தேர்தல் அலுவலர்களிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த வேட்புமனு தாக்கலின் போது மூத்த தேசிய தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஆவடி, மயிலாப்பூர் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். தளி தொகுதியில் ஆந்திர அமைச்சர் சத்ய குமார் யாதவ், அவினாசி- ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி, கோயம்புத்தூர் வடக்கு- ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, மானாமதுரையில்- தமிழக பாஜ மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மதுரை தெற்கு- மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், சாத்தூர்- ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நாகர்கோவில்- தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், விளவங்கோடு- ஒன்றிய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி, திருப்பத்தூர்- சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து தலைவர்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினர்.

Related Stories: