தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போடி சட்டமன்றத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்று, அந்த தொகுதி மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளையும், மக்களின் கோரிக்கைகளையும் 99.9 சதவீதம் நிறைவேற்றிய மனநிறைவோடு இருக்கிறேன். அதிமுகவிலிருந்து நான் எங்கு வெளியே போனேன். அவர்கள் தான் என்னை விரட்டினார்கள்.
எடப்பாடி பழனிசாமி வந்த வழி தவறான வழி. அவர் கட்சிக்கு வந்த வழியும் தவறு. அவரை முதலமைச்சராக நியமனம் செய்தது சசிகலா. அவர்களையே சூரியனை பார்த்து ஏதோ குரைக்கிறது என்று சொன்னால், நன்றி உணர்வு இல்லாத ஒரு மனிதர். அவர் பொதுச்செயலாளராக வந்த காலத்திலிருந்து, அப்பதவியில் நீடிக்கும் வரை என்றும் அதிமுக தோல்வியை படுதோல்வியை தான் சந்திக்கும். இவ்வாறு கூறினார்.
