நாளை, நாளை மறுதினம் சென்னையில் எடப்பாடி பிரசாரம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை, நாளை மறுதினம் சென்னையில் பிரசாரம் செய்கிறார். இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி வருகிற 8 மற்றும் 9ம் தேதி (நாளை, நாளை மறுதினம்) சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

8ம் தேதி (நாளை, புதன்) காலை 9 மணி முதல் வேளச்சேரி – காந்தி ரோடு ஜங்ஷன், சைதாப்பேட்டை – ஐந்து லைட், ஆலந்தூர் ரோடு, விருகம்பாக்கம் – அருணாச்சலம் ரோடு. மாலை 4 மணிக்கு மேல் தி.நகர் – சிஐடி நகர், அண்ணாநகர் – டி.பி.சத்திரம், வில்லிவாக்கம் – எம்டிஎச் ரோடு, கொளத்தூர் – அருள் லட்சுமியம்மாள் கோயில் அருகில், பெரம்பூர் – அசோக்பில்லர். 9ம் தேதி (நாளை மறுநாள், வியாழன்) காலை 9 மணி முதல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி இருசப்ப தெரு (டாக்டர் நடேசன் சாலை), ஆயிரம்விளக்கு – கருமாரியம்மன் கோயில் (புஷ்பா நகர்). மாலை 4 மணிக்கு மேல் ராயபுரம் – பெரியபாளையத்தம்மன் நகர் அருகில் (திருவொற்றியூர் நெடுஞ்சாலை), துறைமுகம் – அரசு அச்சகம் அருகில் (தங்கசாலை), திரு.வி.க.நகர் மற்றும் எழும்பூர் – அம்பிகா ஓட்டல் அருகில் (புளியந்தோப்பு நெடுஞ்சாலை) ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: