மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி தமிழ் மண்ணில் நின்று பரப்புரை செய்ய தயாரா? ஒன்றிய அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய அமைச்சர்களும், பாஜ முதல்வர்களும் தமிழ்மண்ணில் நின்று, ‘‘மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்’’ என்று சொல்லி பரப்புரை செய்ய தயாரா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பாஜ அமைச்சர்களும்-பாஜ முதலமைச்சர்களும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?. தமிழ்மண்ணில் நின்று, ‘‘மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்’’\” என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?. நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்கு தருவது எவ்வளவு? பாஜவால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்கு தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?.

கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் எப்சிஆர்ஏ சட்டத்திருத்தத்தை முழுமையாக திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?. இவற்றுக்கெல்லாம், பழனிசாமியால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?. கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்னைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?. தமிழ்நாட்டை துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: