சென்னை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் எம்.முகமது பஷீர், பொதுச்செயலாளர் எஸ்.முகமது பெய்க் மற்றும் மாநில நிர்வாகிகளும், ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில தலைவர் எஸ்.அப்துல்லாஹ், பொதுச்செயலாளர் முகமது சுல்தான், மாநிலச் செயலாளர்கள் ஆலம், அஜ்மல் மற்றும் மாநில நிர்வாகிகள், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தேசிய தலைவர் அசாதுதீன் உசைவி மற்றும் அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வக்கில் அஹமத், மாநில பொதுச்செயலாளர் ரசூல் மைதீன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி வடசென்னை மாவட்ட தலைவர் எஸ்.சையத் ஜமீல் ஆகியோரும், தெலுங்கர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மாநில தலைவர் புகழ் பாலாஜி நாயுடு, குறிஞ்சி தமிழர் வள்ளி மக்கள் பேரவை நிறுவனர் மாநில தலைவர் எஸ்.எஸ்.ஜெகநாதன், எம்.ஜி.ஆர். கழகம் தலைவர் ராமலிங்கம் ஆகியோர் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் பொதுத் தேர்தலில் முழு ஆதரவு அளிப்பதாகவும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபடுவார்கள் என உறுதி அளித்தனர். அப்போது பொருளாளர் டி.ஆர்.பாலு, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனிருந்தனர்.
பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்
- திமுக
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- ஜனாதிபதி
- தமிழ்நாடு மசூதிகள் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு
- எம். முகமது பஷீர்
- பொதுச்செயலர்
- எஸ். முகமது பெய்க்…
