ஆலங்குளம், ஏப்.7: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மனோஜ் பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை அவர் வேட்புமனு தாக்கல் செய்ய தாலுகா அலுவலகம் வந்தார். அங்கு ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது, அவருடன் நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் எம்பி ராமசுப்பு, சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், தென்காசி மாவட்ட ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் முகமதுசலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
