நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கிமுத்து பிஷப் பர்ணபாஸிடம் வாழ்த்து

நெல்லை, ஏப். 7:நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கிமுத்து, நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல பிஷப் பர்ணபாசை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்.23ம்தேதி நடக்கிறது. இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சார்பில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் இசக்கிமுத்து, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு ‘குக்கர்’ சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். மேலும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் நெல்லை சிஎஸ்ஐ திருமண்டலம் பிஷப் பர்ணபாசை, நாங்குநேரி தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கிமுத்து நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து அவர், வெற்றி பெற பிஷப் பர்ணபாஸ் வாழ்த்தினார்.

இந்நிலையில், பாளை கேடிசி நகரில் உள்ள அமமுக மாவட்ட கழக அலுவலகத்தில் அனைத்து சைவ வேளாளர் கிளைச் சங்கங்களின் நிர்வாகிகள், வேட்பாளர் இசக்கிமுத்துவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் தங்களது நீண்டநாள் கோரிக்கையான பொருளாதாரத்தில் பின்தங்கிய சமுதாயத்திற்கான 10 சதவீதம் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த வேட்பாளர் இசக்கிமுத்து, தேர்தலில் வெற்றி பெற்றதும் உங்களது இடஒதுக்கீடு சம்பந்தமான கோரிக்கை எனது குரல் மூலம் சட்டசபையில் ஒலிக்கும் என வாக்குறுதி அளித்தார்.

Related Stories: