குமரி மாவட்ட இந்து நாடார் சங்க செயற்குழு கூட்டம் கல்வி உதவித்தொகை வழங்கல்

நாகர்கோவில், ஏப். 7: குமரி மாவட்ட இந்து நாடார் சங்க செயற்குழு கூட்டம் நாகர்கோவில் ஜெகநாதன் தெருவில் உள்ள சான்றோர் நகரில் சங்க தலைவர் என்.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உவரி திருக்கோயிலில் கடந்த விசாகத் திருவிழாவின் போது விபத்தில் மரணம் அடைந்த ஆறுதெங்கன்விளை ஊரை சேர்ந்த நாராயணன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் விதமாக அவரது மகள் அபிஷாவிடம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. செயற்குழுக் கூட்டத்தின் போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆர்.மகேஷ், என். தளவாய்சுந்தரம் மற்றும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டனர். அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்யும் வேட்பாளர்களுக்கு தங்களது வாக்குகளை தவறாது செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும் சங்க வளர்ச்சி சம்பந்தமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: