மார்த்தாண்டம் அருகே ஐகோர்ட் வக்கீலை மிரட்டிய தம்பதி மீது வழக்கு

மார்த்தாண்டம், ஏப்.7: மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியை சேர்ந்தவர் பாபு (56). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராபின்சன் (53) என்பவருக்கும், பாபுவிற்கும் இடையே மதில் சுவர் தொடர்பாக பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பத்தன்று ராபின்சன் ஆட்டோவை கொண்டு மதில் சுவரை இடித்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பாபு ஏன் மதில் சுவரை இடித்தீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராபின்சன், அவரது மனைவி புஷ்பகலா (47) ஆகியோர் சேர்ந்து தகாத வார்தைகளால் திட்டியதுடன் ஆட்டோவை ஏற்றி கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பாபு மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராபின்சன், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: