பாளையங்கோட்டை உழவர் சந்தையில் 350 கிலோ காய்கறியில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்

தியாகராஜ நகர், ஏப். 5: பாளை உழவர் சந்தையில் 350 கிலோ எடையுள்ள காய்கனிகளால் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் வடிவமைக்கப்பட்டன. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த பொதுத் தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் 100% வாக்களிப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து தினமும் நடத்தப்பட்டு வருகிறது. ேநற்று பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 350 கிலோ எடையுள்ள பல்வேறு காய்கனிகளால் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு வாசகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதனை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து காய்கறி வாங்க வந்தவர்களுக்கு 100% வாக்களிப்பது தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட துணிப்பைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் தலைமையில் 100% வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சரவணன், தேர்தல் பணி அலுவலர்கள், உழவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: