சொந்த ஊரில் வெற்றி கணக்கை தொடங்குமா குஜராத்?: ராஜஸ்தானுடன் இன்று மோதல்

டெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது. குஜராத் முதல் போட்டியில், பஞ்சாப் அணியிடம் போராடி தோற்ற நிலையில் இன்று சொந்த ஊரில் வெற்றி கணக்கை தொடங்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது. பேட்டிங்கில் சாய்சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக ஆடவேண்டிய கட்டாயம்உள்ளது. மிடில் ஆர்டரில் பிலிப்ஸ், பட்லர் வலுசேர்க்கின்றனர். திவாட்டியாவுக்கு என்ன ரோல் என்றே தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அணியில் இடம்பிடித்து வருகிறார். பவுலிங்கில் ரபாடா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷித்கான் மீது எதிர்பார்ப்பு உள்ளது.

மறுபுறம் ராஜஸ்தான் , தனது முதல்போட்டியில் சிஎஸ்கேவை சாய்த்த உத்வேகத்தில் உள்ளது. ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி, துருவ் ஜூரல், கேப்டன் ரியான் பராக், ஹெட்மியர், ஜடேஜா அசத்துவர். இரு அணிகளும் இதற்கு முன் 8 போட்டியில் மோதியதில் 6ல் குஜராத், 2ல் ராஜஸ்தான் வென்றுள்ளது. முன்னதாக மாலை 3.30 மணிக்கு டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் மோதி வருகின்றன. முதல் போட்டியில் வலுவான 2 அணிகளும் வென்ற நிலையில் இன்று வெற்றியை தக்க வைக்க போராடி வருகின்றன.

Related Stories: