இலங்கை கோர்ட்டில் துஷாரா வழக்கு

கொழும்பு: இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது. ஆனால், அவருக்கு உடல் தகுதி இல்லை எனக் கூறி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தகுதிச் சான்று அளிக்க மறுத்தது.

அதனால், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல்லில் துஷாராவால் பங்கேற்க முடியாமல் போனது. இந்நிலையில், ஐபிஎல்லில் தன்னை விளையாட அனுமதிக்கும்படி கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் துஷாரா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Stories: