லாரி மீது பைக் மோதி சிறுவன் கவலைக்கிடம்

செங்கல்பட்டு, ஏப்.2: செங்கல்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் என்பவரது மகன் மோனிஷ் (17). இந்த சிறுவன் நேற்றுமுன்தினம் மதியம் செங்கல்பட்டில் இருந்து பாலூர் நோக்கி தனது பைக்கில் சென்றார். அப்போது, செங்கல்பட்டு – காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தேவனூர் ஆஞ்சனேயர் கோவில் சந்திப்பு அருகே வந்தபோது, சாலையை கடக்க முயன்ற டிப்பர் லாரியின் பின்புறத்தில் மோனிஷின் பைக் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மோனிஷை அங்கு இருந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான சூழலில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: