மதுராந்தகம், ஏப்.2: உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோட்டநாவல் கிராமத்தில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து 200 பேர் மாவட்ட செயலாளர் க.சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக க.சுந்தர் போட்டியிடுகிறார். இவர் தினமும் தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் சாலவாக்கம் அருகே உள்ள ஆலஞ்சேரி, ஆனம்பாக்கம், நெய்யடிவாக்கம், ரெட்ட மங்கலம், அமராவதி பட்டினம், வாடாத ஊர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சிதோட்டநாவல் கிராமத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் அதிமுக மாவட்ட முன்னாள் வர்த்தக அணி துணை தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் தேவிகா, ஏழுமலை, உள்ளிட்ட மாற்று கட்சி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளருமான க.சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு திமுக கட்சி சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டது. மேலும் அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது, வேட்பாளர் க.சுந்தர் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சாதனை திட்டங்களை செய்துள்ளார். அது உங்களுக்கு நன்கு தெரியும். இந்த பகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளேன். ஆகவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் குமார், நிர்வாகிகள் ரவி, சிவராமன், பாலமுருகன், நதியா கோபி, மணிகண்டன், கோகுலக் கண்ணன், கார்த்தி, சீனிவாசன், ரத்தினமாலா, முரளி, ஜெயக்குமார், மனோகரன், சங்கர், கோடீஸ்வரன், பாபு ஷரீப், நந்தா, விஷ்ணு, மணிகண்டன், லோகநாதன், வீரபாண்டி, பூபாலன், காத்தவராயன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தரமூர்த்தி, வெங்கட்ராமன், கோமாலா ஐயப்பன், கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
