பாகிஸ்தான், லண்டன் சொத்து விவரங்களை கவுரவ் கோகாய் வெளியிட வேண்டும்

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில்,’ காங்கிரஸ் மாநில தலைவர் கவுரவ் கோகாய் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் வைத்துள்ள தனது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். கோகாய் தனது மனைவியின் பாகிஸ்தான் வருமானம் குறித்த விவரங்களை அளிக்கவில்லை; அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள அவரது மனைவியின் வங்கிக் கணக்கு குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.

கவுரவ் கோகாய்க்கு பாகிஸ்தான் மற்றும் லண்டன் ஆகிய இரு இடங்களிலும் சொத்துக்கள் உள்ளன. அதே போல் ராய்ஜோர் தளம் கட்சியின் தலைவர் அகில் கோகாய்க்கு அமெரிக்காவிலும் சொத்து உள்ளது. இது எனது தனிப்பட்ட குற்றச்சாட்டு அல்ல; மாறாக, தேர்தல் ஆணையத்திடம் அவர் சமர்ப்பிக்கும் பிரமாணப் பத்திரத்தில், பாகிஸ்தானில் அவர் மேற்கொண்ட பணப் பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை அவர் அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்றார்.

Related Stories: