புதுடெல்லி: டெல்லி மருத்துவமனையில் இருந்து சோனியாகாந்தி நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24ம் தேதி டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 7 நாட்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தனர். தற்போது அவர் குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
