புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, பாக்தா தொகுதியைச் சேர்ந்த சோமா தாக்கூர் உட்பட மேலும் 13 வேட்பாளர்களின் பெயர்களை பாஜ நேற்று அறிவித்தது. இந்த வேட்பாளர் பட்டியலின்படி, ஹவுரா தக்ஷின் தொகுதியிலிருந்து ஷியாமல் ஹதி, நடபாரி தொகுதியிலிருந்து கிரிஜா சங்கர் ராய் மற்றும் சிதாய் தொகுதியிலிருந்து அசுதோஷ் பர்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மக்ரஹத் பூர்வா தொகுதியிலிருந்து உத்தம் குமார் பானிக், பால்டா தொகுதியிலிருந்து தேபாங்ஷு பாண்டா, சோனார்பூர் உத்தர் தொகுதியிலிருந்து தேபாஷிஷ் தார் மற்றும் பன்ச்லா தொகுதியிலிருந்து ரஞ்சன் குமார் பால் ஆகியோர் தேர்தல் களத்தில் இறங்குகின்றனர்.
மேற்குவங்கத்தில் மேலும் 13 வேட்பாளர்களை அறிவித்தது பாஜ
- பாஜக
- மேற்கு வங்கம்
- புது தில்லி
- சோமா தாக்கூர்
- பாக்தா
- மேற்கு வங்க சட்டமன்றம்
- ஷ்யாமல் ஹதி
- ஹவுரா தக்ஷின்
- கிரிஜா சங்கர்
- நாடாபரி
