எபோலா நோய் பரவல்: காங்கோ, உகாண்டா செல்ல வேண்டாம்: ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

 

புதுடெல்லி: காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலைமையை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில்,காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கும்படி இந்திய குடிமக்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் புண்டிபக்யோ வைரஸ் திரிபினால் ஏற்படும் எபோலா நோய் பாதிப்பு எதுவும் இந்தியாவில் பதிவாகவில்லை என அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: