மே. வங்கம் பால்டா தொகுதியில் மறுதேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பாஜ வெற்றி: டெபாசிட் இழந்தது திரிணாமுல் காங்.

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அங்குள்ள பால்டா தொகுதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து கடந்த 21ம் தேதி மறுவாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. பாஜ வேட்பாளர் தேபாங்ஷு பாண்டா 1,49,666 வாக்குகள் பெற்று, 1,09,021 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் சம்பு நாத் குர்மி 40,645 வாக்குகளுடன் 2ம் இடத்தையும், காங்கிரஸ் வேட்பாளர் அப்துர் ரசாக் மொல்லா 10,084 வாக்குகளுடன் 3வது இடத்தையும் பிடித்தனர். 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் 7,783 வாக்குகளுடன் டெபாசிட் இழந்தார். வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பாக தேர்தலில் இருந்து விலகுவதாக ஜஹாங்கீர் அறிவித்தாலும் வாபஸ் பெறுவதற்காக அவகாசம் முடிந்துவிட்டதால் அவரது பெயர் வாக்கு இயந்திரத்தில் இடம் பெற்றிருந்தது.

Related Stories: