கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூறுகையில்,‘‘பாஜவுக்கு எதிரான நீண்ட அரசியல் போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் தயாராக உள்ளது. இறுதி வரை விட்டு கொடுக்க மாட்டோம். பாஜவை வீழ்த்துவதற்கான கூட்டு வியூகம் பற்றி விவாதிக்க அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள் தோல்வியுற்ற இடங்களாகவும், தோல்வியுற்ற இடங்கள் வெற்றி பெற்ற இடங்களாகவும் மாற்றப்பட்டன. இல்லையெனில் திரிணாமுல் காங்கிரஸ் 230 இடங்களை வென்றிருக்கும் ’’ என்றார்.
