சட்டமன்ற தேர்தலையொட்டி ஏப்ரல் 23ம் தேதி பொது விடுமுறை: தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் வருகிற 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி அன்று அனைவரும் வாக்களிக்க வசதியாக பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் பிறப்பித்த அறிவிப்பை அரசாணையாக தலைமை செயலாளர் முருகானந்தம் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது: மத்திய அரசின் சட்டப்படி, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுப்படி, ஏப்ரல் 23ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி, அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அன்று ஒருநாள் மட்டும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இதற்கான உத்தரவு பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: