திருவொற்றியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ேகாயிலை 100 ஜாக்கி மூலம் 3 அடிக்கு உயர்த்தும் பணி துவக்கம்

 

திருவொற்றியூர்: திருவொற்றியூரில்ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி நாச்சந்தி அம்மன் கோயிலை 100 ஜாக்கிகள் மூலம் 3 அடிக்கு உயர்த்தும் பணி துவங்கியுள்ளது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை வடக்கு மாவட்ட வீதியில் 60 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி நாச்சந்தி அம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கோயில் வளாகம், சாலை மட்டத்தை காட்டிலும் 3 அடி பள்ளத்தில் உள்ளது. இதனால், மழை காலத்தில் கோயிலுக்குள் மழைநீர் புகுந்து பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கோயிலை ஜாக்கிகள் மூலம் உயரத்தில் தூக்கிவைத்து புனரமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நேற்று கோயிலை உயரத்தில் தூக்கிவைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதைதொடர்ந்து 10க்கும் மேற்பட்ட அனுபவமிக்க ஊழியர்கள் மூலம் கோயில் அடித்தளத்தில் 100 ஜாக்கிகள் பொருத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது. இப்பணி மூலம் கோயில் வெளிப் புறத்தில் 3 அடி உயரமும், கருவறை 6 அடி உயரமும் உயர்த்தப்பட உள்ளது. ஒரு மாதத்தில் பணி முடிவடையும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Related Stories: